--- --:--:-- --

உயிரிழந்த மனைவியின் சிலையை தத்ரூபமாக வடிவமைத்த கணவர்..!

6

னைவி இல்லாமல் போனாலும் அவருடைய நினைவுகளை இழக்க மனமின்றி மதுரையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தத்ரூபமாக சிலை ஒன்றை அமைத்துள்ளார். நவீன தொழில்நுட்பத்தில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

 

மதுரை மேல பொன்நகரத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரான சேதுராமனின் மனைவி பிச்சைமணி அம்மாள் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி காலமானார். மனைவி மீது மிகுந்த பாசம் கொண்டிருந்த சேது ராமன் தனது மனைவியை என்றும் கண்ணாரக் காண வேண்டும் என்ற விருப்பத்தில் தத்ரூபமாக சிலை ஒன்றை வடிவமைத்துள்ளார்.

 

மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சிற்பியான பிரசன்னா மற்றும் ஓவியர் மதுரை மருது ஆகியோரைக் கொண்டு பைபர் மெட்டீரியல் கொண்டு இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அமர்ந்த கோலத்தில் அவர் வழக்கமாக அமரும் பாணியில் சிரித்த முகத்துடன் பிச்சைமணி அம்மாளின் உருவம் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.

 

மனைவி இறந்ததால் 30ஆவது நாளில் இந்த மனைவியின் சிலையை வைத்து சேதுராமன் வழிபாடு நடத்தியுள்ளார். கண்ணில் மறைந்தாலும் கருத்தில் மறையாத காதல் மனைவிக்கு சிலை வைத்து தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கும் தொழிலதிபரின் செயல் காண்போரை நெகிழ வைக்கிறது.

Leave a Reply

Right Menu Icon