--- --:--:-- --

ஓட்டுனர் வேலைக்கு சென்றவரை ஒட்டகம் மேய்க்க கூறி உணவு தராமல் கொடுமை..!

5

வுதி அரேபியாவுக்கு ஓட்டுனர் வேலைக்கு சென்ற தன்னை கொத்தடிமையாக ஒட்டகம் மேய்க்க விடுவதால் காப்பாற்றும்படி கள்ளக்குறிச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கதறி அழுதபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

லட்சியம் கிராமத்தை சேர்ந்த மனோஜ் என்பவர் டிப்ளோமோ படித்து விட்டு 8 மாதங்களுக்கு முன்னதாக சவுதி அரேபியாவுக்கு ஓட்டுனர் வேலைக்கு சென்றுள்ளார். ஒரு லட்சம் ரூபாய் பணம் கட்டி டூரிஸ்ட் விசாவில் சென்றவரை இரண்டு மாதங்கள் மட்டும் ஓட்டுநர் வேலை கொடுத்து விட்டு பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்க விட்டதாக தனது தந்தைக்கு அனுப்பிய செல்போன் வீடியோவில் மனோஜ் கூறியுள்ளார்.

 

அதுமட்டுமின்றி தன்னை அடித்து கொடுமை படுத்துவதாகவும் சாப்பிட உணவாக பண் மட்டும் தருவதால் காப்பாற்றும்படி அந்த வீடியோவில் மனோஜ் கதறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon