--- --:--:-- --

80 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தையை விற்க முயன்ற தம்பதி..!

5

பொள்ளாச்சி அருகே பிறந்து 20 நாட்களே ஆண் குழந்தையை எண்பது ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த பெண் இடைத்தரகர் மற்றும் குழந்தையை விலைக்கு வாங்கிய தம்பதிகள் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

கோபிசெட்டிபாளையத்தில் சேர்ந்த ராஜேஷ் குமார் கோகிலா தம்பதி தங்களுக்கு குழந்தை ஒன்று விலைக்கு வேண்டுமென பொள்ளாச்சி ஆழியார் புளியங்கண்டியை சேர்ந்த பௌலினா என்ற பெண்ணை அணுகியுள்ளனர்.

 

மூவரும் சேர்ந்து அங்கலக்குறிச்சியை சேர்ந்த சலவை தொழிலாளி ஒருவர் முருகவேல், சுதா தம்பதிக்கு கடந்த 20 நாட்களுக்கு முன் பிறந்த ஆண் குழந்தையை 80 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி சென்றனர். தகவலறிந்த காவல்துறையினர் மூவரையும் கைது செய்து குழந்தையை மீட்டனர்.

Leave a Reply

Right Menu Icon