ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தாயின் இரண்டாவது கணவன்..!
நாமக்கல் அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தாயின் இரண்டாவது கணவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். சேந்தமங்கலம் அடுத்த படத்தையன் குட்டை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கணவரை பிரிந்த நிலையில் லாரி ஓட்டுனர் பரமநாதன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.
இதற்கிடையில் அந்த பெண்ணின் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகள் வீட்டில் தனிமையில் இருந்த போது பரமநாதன் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது தாய் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்த நிலையில் அவனை போலீசார் கைது செய்தனர்.







