--- --:--:-- --

அனாதை பிணத்தை அடக்கம் செய்த காவலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் பொது மக்கள்..!

5

நெல்லை மாவட்டம் பணகுடியில் அனாதை பிணத்தை காவலர்கள் அடக்கம் செய்ததை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். பிளாக் கொட்டை பாறை அருகே ஆண் சடலம் ஒன்று பத்து நாட்களுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த சடலத்தை உறவினர்கள் யாரும் அடக்கம் செய்ய முன்வரவில்லை.

 

இதனை கண்ட காவலர்கள் தம்முடைய சொந்த செலவில் சடலத்தை கல்லறை தோட்டத்தில் இறுதி சடங்குகளை செய்து நல்லடக்கம் செய்தனர். காவலர்களின் நற்செயலை கண்டு பொதுமக்கள் அவர்களை பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon