--- --:--:-- --

கொரொனா தடுப்பு மருந்து பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு..!

3

லகமே மிகவும் எதிர்பார்த்த ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரொனா தடுப்பு மருந்து பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் அனைவரின் முன்பும் தற்போதுள்ள மிகப்பெரிய கேள்வியே கொரோனா தடுப்பு மருந்து எப்போது வரும் என்பது தான்.

 

பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தடுப்பு மருந்தை உருவாக்கி பரிசோதனைகளில் பாய்ச்சல் காட்டி வருகின்றன. இதில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், ஆஷ்ட்ரா ஜெனிகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கிய தடுப்பூசி தான் முதலில் சந்தைக்கு வர வாய்ப்புள்ள மருந்துகளில் ஒன்றாக கருதப்பட்டது.

 

முதல் இரண்டு கட்ட சோதனைகளை மளமளவென முடித்து மூன்றாம் கட்ட சோதனையை விரைந்து நடத்தி வந்த நிலையில் அதற்கு திடீரென பிரேக் போடப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட ஒருவர் உடலில் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டதால் சோதனைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக ஆஸ்ட்ரோ ஜெனகா தெரிவித்துள்ளது.

 

எனினும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவருக்கு எதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டது என அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை. கொரொனா தடுப்பூசியை எதிர்பார்த்து காத்திருக்கும் கோடானகோடி மக்களுக்கு இது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆனால் மிகப்பெரிய அளவில் நடைபெறும் மருத்துவ சோதனைகளில் இது போன்று தற்காலிக பின்னடைவுகள் வழக்கமான ஒன்றுதான் என மருத்துவத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மருந்து சோதனை சற்று பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் அமெரிக்காவின் மாடர்ணா.

 

ஜெர்மனியின் பயான் டெக் மற்றும் பைசர் ஆகிய நிறுவனங்களின் தடுப்பு மருந்துகள் இறுதிகட்ட சோதனைகளும் நிறைவுறும் தருவாயில் உள்ளன. முன்னதாக ஆஷ்ட்ரா ஜெனகா உள்ளிட்ட கொரொனா தடுப்பில் ஈடுபட்டுள்ள 9 நிறுவனங்கள் உறுதி மொழி ஒன்றை எடுத்து இருந்தன.

 

தடுப்பு மருந்து உருவாக்கியுள்ள அறிவியல் பூர்வமான நெறிகளை முழுமையாக கடைபிடிக்க உள்ளதாக அவை தங்கள் உறுதிமொழியில் தெரிவித்திருந்தனர். இந்த தகவல் வெளியான மறுநாளே கொரொனா தடுப்பு சோதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon