--- --:--:-- --

சீன எல்லையில் சீன ராணுவ வீரர்கள் கத்தி, கம்புகளுடன் இருக்கும் படம்..!

15

இந்திய, சீன எல்லையில் சீன ராணுவ வீரர்கள் கத்தி, கம்புகளுடன் இருக்கும் படம் வெளியாகியுள்ளது. துப்பாக்கியை தோளில் பின்பக்கம் தொங்கவிட்டுள்ள அந்நாட்டு ராணுவ வீரர்கள் கையில் கத்தியால் கட்டிய கம்பை வைத்துள்ளனர்.

 

இதனால் இந்திய ராணுவ வீரர்கள் அவர்களை அருகில் வந்து விடாத வண்ணம் ஜாக்கிரதையாக உள்ளதாகவும் அப்படி வந்தால் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்தது போன்று மோதல் சம்பவம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

முன்னதாக பாங்காங் ஏரி பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன படையினரை எச்சரிக்கும் விதமாக இந்தியப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீன ராணுவ செய்தி தொடர்பாளர் கூறியதற்கு இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்திருந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon