--- --:--:-- --

செப்.21 முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ள மத்திய அரசு..!

4

ரும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை பகுதி நேரமாக பள்ளிகளை நடத்த மத்திய சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து பள்ளிகள் திறப்பதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

 

அதே நேரத்தில் தமிழகத்தைப் பொருத்தவரை பள்ளிகள் திறப்பது பற்றி தமிழக அரசு இதுவரை அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. புதிய வழிகாட்டு நெறிமுறையில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தொடர்ந்து இணையவழிக் கல்வி முறையையே பயில்வதற்கு ஊக்க படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மாணவர்களின் சுய விருப்பத்தின் அடிப்படையிலேயே அவர்களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும் என்றும், கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர பிற பகுதிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறந்து கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக வகுப்பறைகள் அனைத்தும் முழுமையாக தூய்மை படுத்தப்படவேண்டும். பள்ளி வளாகத்தில் சோடியம் ஹைட்ரோ குளோரைடு கொண்டு அவ்வப்போது தூய்மைபடுத்தப்படவேண்டும். பிரார்த்தனைக் கூட்டம், விளையாட்டு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 

ஓய்வு நேரங்களில் மாணவர்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும். பள்ளிகளில் உள்ள நீச்சல் குளத்தை பயன்படுத்தக்கூடாது. நுழைவு வாயிலில் மாணவர்களுக்கு சானிடைசர் வழங்கி தெர்மல் சோதனை நடத்தப்பட வேண்டும்.

 

மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என அறிகுறிகள் இல்லாதவர்களை மட்டுமே பள்ளிக்குள் அனுமதிக்கப்படவேண்டும். வகுப்பு தொடங்குவதற்கு முன், வகுப்பு முடிந்த பின்பும் வகுப்பறைகளை தூய்மைப்படுத்த வேண்டும்.

 

வகுப்பறையில் மாணவர்கள், ஆசிரியர்கள் எப்போது முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் பேனா பென்சில் புத்தகங்கள் ஆகியவற்றை மாணவர்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ள அனுமதிக்கக்கூடாது. தனிநபர் இடைவெளியில் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.

 

குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை அனைத்து மாணவர்களையும் கைகளை நன்றாக தூய்மைப்படுத்த பழக்கப்படுத்த வேண்டும் என பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. பள்ளிகளை திறப்பதற்கான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருந்தாலும் தமிழகத்தைப் பொருத்தவரை பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

Leave a Reply

Right Menu Icon