--- --:--:-- --

நாளொன்றுக்கு 10 மணி நேரம் வீதம் ஒரு மாதத்தில் 2369 கிலோ மீட்டர் ஓடி இளைஞர் சாதனை..!

11

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே பட்டதாரி இளைஞர் ஒருவர் நாளொன்றுக்கு 10 மணி நேரம் வீதம் ஒரு மாதத்தில் 2369 கிலோ மீட்டர் ஓடி இந்தியா ரன்னர் போட்டியில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

 

நடுவீரப்பட்டு கிராமத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் தினேஷ் கண்ணன் சிறுவயது முதலே ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்று முதல் மூன்று இடங்களை பிடித்து வந்துள்ளார்.

 

இந்த நிலையில் தேசிய அளவில் சாதிக்க எண்ணிய அவர் இந்திய ரன்னர் போட்டியில் பங்கேற்று ஆகஸ்ட் மாதம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 10 மணி நேரம் என்றால் 80 கிலோ மீட்டர் வீதம் விளையாட்டு மைதானம் சாலைகளில் ஓடி ஒரே மாதத்தில் 2369 கிலோ மீட்டர் தூரம் கடந்து முதலிடம் பிடித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon