தமிழகத்தில் இன்று புதிதாக 5, 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… 89 பேர் உயிரிழப்பு…
தமிழகத்தில் இன்று புதிதாக 5,776 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 89 உயிரிழந்துள்ளனர்.
இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 69 ஆயிரத்து 256 உயர்ந்துள்ளது.
இன்று 5 ஆயிரத்து 930 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் இதுவரைக்கும் 4 லட்சத்து 10 ஆயிரத்து116 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்று 89 பேர் அரசு மருத்துவமனையில் 53 பேர், தனியார் மருத்துவமனையில் 36 பேர் என பலியானோரின் மொத்த எண்ணிக்கை 7,925 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 80,503 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், 78 ஆயிரத்து 526 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை 53,79,011 மாதிரிகளும், 52,04,757 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.






