--- --:--:-- --

நீலகிரியில் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய மதபோதகர் கைது..!

12

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே பெண்ணிடம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக மதபோதகர் கைது செய்யப்பட்டார். முடியகம்பு குதியில் சபையை நடத்தி வருபவர் மதபோதகர் அசோக்.

 

இவர் தனது சபைக்கு வரும் இளம்பெண்களிடம் செல்போனில் ஆபாசமாக பேசி வருவதாகவும் இது குறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி வருவதாகவும் மூன்று பெண்கள் சமூக வலைதளங்கள் மூலம் புகார் தெரிவித்திருக்கிறார்.

 

மற்றொரு பெண் சர்ச்சைக்குரிய போதகர் மீது கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு அசோக்கை கைது செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon