--- --:--:-- --

நாடு முழுவதும் நடைபெற்ற NATA தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது!

18

கொரொனா அச்சுறுத்தல் காரணமாக முதன்முறையாக வீட்டிலிருந்தே தேர்வெழுத அனுமதிக்கப்பட தேசிய கட்டட கலை திறனறிவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. ஐந்தாண்டு பி‌. ஆர்க் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு கொரொனா காரணமாக விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு மையங்கள் மட்டுமின்றி வீட்டில் இருந்தே தேர்வு எழுத மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

 

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் நடத்தப்பட்ட இந்த தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடும் 357 பேர் வீட்டில் இருந்து தேர்வெழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கட்டடக் கலைக் குழுமம் அறிவித்துள்ளது.

 

நாடு முழுவதிலும் தேர்வு எழுதிய 22,843 பேரில் 19 ஆயிரத்து 79 பேர் நுழைவுத் தேர்வில் தகுதி பெற்றுள்ளனர். இணையதள இணைப்பு கோளாறு, மின்வெட்டு போன்ற காரணங்களால் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மற்றொரு முறை தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 

முதல் தேர்வில் பங்கேற்க முடியாமல் போன அல்லது மதிப்பெண்களை அதிகரிக்க விரும்பும் மாணவர்களும் இந்த மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. ஆனால் ஐந்தாம் தேதி அறிவிப்பு வெளியான நிலையில் இன்று வரை மட்டுமே விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon