3 பெண்களை ஏமாற்றியவனுக்கு கிடைத்த அடி, உதை..!
தெலுங்கானாவில் அடுத்தடுத்து மூன்று பெண்களை ஏமாற்றிய நபருக்கு அவரது மனைவியின் உறவினர்கள் தர்மஅடி கொடுத்ததுடன் தரதரவென இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.கரீம் நகர் மாவட்டம் ஓட்டுகூறு கிராமத்தை சேர்ந்த சம்பத் என்பவர் மனைவியை பிறந்த வீட்டிற்கு விரட்டி விட்டு வேறு பெண்ணுடன் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
ரகசிய இருப்பிடம் அறிந்த மனைவியின் உறவினர்கள் அங்கு சென்று சம்பத்தை அடித்து உதைத்து கயிற்றால் கட்டி இழுத்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறை விசாரணையில் சம்பத் இது போன்று மேலும் இரண்டு பெண்களை ரகசியமாக திருமணம் செய்து மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
குறிப்பாக வறுமை காரணமாக வேலைக்கு செல்லும் ஏழை பெண்களை குறி வைத்தே இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்பாக மூன்று பெண்களும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.







