--- --:--:-- --

முதுமலையில் பெண்ணை வேட்டையாடி கொன்ற புலி..!

9

முதுமலை வனப்பகுதியில் பழங்குடியின பெண்ணை கொன்று ஒரு கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது மனிதர்களை வேட்டையாடும் புலியாக இருக்கலாம் என்று அச்சம் அதிகரித்துள்ளது. அங்கு பறக்கும் கேமராக்கள் மூலம் புலியின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.

 

இந்தியாவில் உள்ள 4 புலிகள் சரணாலயத்தில் ஒன்றான முதுமலை புலிகள் சரணாலயம் 925 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. அதன் வெளிப்பட்ட பகுதியில் சமீபத்தில் தான் சில வனச்சரக பகுதிகள் இணைக்கப்பட்டன.

 

அங்கு உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 50 வயது கௌரி புலி தாக்கி இறந்து இருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக வேட்டையாட முடியாத புலிகள் தான் மான் மற்றும் கால்நடைகளை கொன்று சாப்பிடுவது வழக்கம்.

 

ஆனால் இந்த புலியோ பெண்ணை கொன்று இருப்பதால் அது மனிதர்களை குறிவைத்து வேட்டையாடும் புலியாக இருக்கலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. முதுமலை புலிகள் சரணாலயத்தை ஒட்டிய பந்திப்பூர் சரணாலயத்தில் புலி தாக்கி கர்நாடக வன ஊழியர்கள் இறந்துள்ளனர்.

 

அந்த புலி முதுமலை சரணாலயத்தில் ஊடுருவி இருக்க வாய்ப்பு உள்ளது. அதன் நடமாட்டத்தை பறக்கும் கேமராக்கள் மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon