--- --:--:-- --

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கும் நிகழ்ச்சி காணொளி மூலம் நடைபெற்றது..!

4

விளையாட்டுத் துறையில் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது தமிழக வீரர் மாரியப்பன் உள்ளிட்ட ஐவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கொரொனா அச்சுறுத்தல் காரணமாக முதன்முறையாக காணொளி மூலம் விருது வழங்கும் விழா நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காணொளி மூலம் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

 

பேரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் இந்திய பெண்கள் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா ஆகியோர் காணொளி மூலம் விருது வழங்கும் விழாவில் பங்கேற்றனர். மல்யுத்த வீராங்கனை தினேஷ் கொரொனா தொற்று காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

 

ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக துபாயில் உள்ள கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அதான்தாஸ், டியூட்டி சந்த், கிரிக்கெட் வீரர் இஷாந்த் ஷர்மா, தீப்தி. கபடி வீரர் தீபக் உள்ளிட்ட 27 பேருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.

 

வாழ்நாள் சாதனையாளருக்கான துரோணாச்சாரியா விருது பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும். விருது பெறும் போது அதற்கான சான்றிதழ் வீரர்களுக்கு திரையில் காண்பிக்கப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon