--- --:--:-- --

தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தாத மாணவர்களுக்கும் பருவத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்..!

1

தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தாத மாணவர்களுக்கும் பருவத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து மதிப்பெண் அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஊரடங்கின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டன என்றும் ஏழை எளிய நடுத்தர மக்கள் வாழ்வாதாரத்திற்காக கடுமையாகப் போராடிக் கொண்டிருந்த நிலையில், பிள்ளைகளின் தேர்வு கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிப்பதாக கூறினார்.

 

இதனால் பல கல்லூரிகளில் உள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களுடைய பெற்றோர்களும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளனர் என்றும் கூறினார்.

 

ஆகவே கட்டணத்தைச் செலுத்தாத மாணவர்களின் பருவ தேர்வுக்கும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து மதிப்பெண் வழங்க வேண்டும் என்று முதலமைச்சரை வலியுறுத்தியுள்ளார்.

 

ஏற்கனவே இறுதியாண்டு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக வேலைவாய்ப்பு வழங்கியிருக்கும் நிறுவனங்கள் அந்த வேலை வாய்ப்புகளை ரத்து செய்யக்கூடாது என்று அரசின் சார்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon