--- --:--:-- --

திருமண வீட்டில் நித்யானந்தாவை புகழ்ந்து வைக்கப்பட்ட பேனர்..!

13

திருச்சி மாவட்டத்தில் திருமண வீட்டில் நித்யானந்தாவை புகழ்ந்து வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகையை போலீசார் அகற்றினர். மணப்பாறை அருகே நடந்த திருமண விழாவில் வைக்கப்பட்ட விளம்பர பதாகை ஒன்று திருமணத்திற்கு வந்தவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.

 

அந்த விளம்பரப் பதாகையில் பல வருடமாகவே கன்னி தீவை தேடி அலைகிற சிந்துபாத் எங்கே, கண்ணிகளை வைத்து ஒரு தீவை ரெடி பண்ணுண நம்ம நித்தியானந்தா எங்கே என எழுதப்பட்டிருந்தது.

 

மேலும் நித்யானந்தா மணமக்களை வாழ்த்துவது போலவும் குறிப்பிட்டு நோ சூடு நோ சொரணை என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. .தகவலறிந்த மணப்பாறை போலீசார் அந்த விளம்பர பதாகையை அகற்றினார்.

Leave a Reply

Right Menu Icon