கடன் தொல்லையால் உயிரிழந்த பெற்றோர்..! குழந்தைகளை சந்தித்து ஆறுதல் கூறிய மாவட்ட ஆட்சியர்..!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மீட்டர் வட்டி கொடுமையால் தம்பதி தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரின் குழந்தைகளை நேரில் சந்தித்து மாவட்ட ஆட்சியர் ஆறுதல் கூறினார்.
கைலாச பாளையத்தில் மீட்டர் வட்டி கொடுமையால் கடன் வாங்கிக் கொடுத்தவர்கள் தகாத வார்த்தைகளால் பேசியதால் மனம் உடைந்து விசைத்தறி தொழிலாளர் சுப்பிரமணியம், மேனகா தம்பதியினர் கடந்த 21ஆம் தேதி மகள், மகனுடன் அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
இதில் தம்பதி உயிரிழந்த நிலையில் உயிர் பிழைத்த குழந்தைகள் இரண்டும் தாத்தா பாட்டியுடன் வசித்து வருகின்றனர். அவரை நேரில் சந்தித்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் அழுதபடி பேசிய குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





