டிக் டாக் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது..!
அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றத்தில் சீனாவை சேர்ந்த டிக் டாக் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கூறி தங்கள் மொபைல் செயலிக்கு தடை விதிக்க டிரம்ப் முயல்வதாகவும் ஆனால் அதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்றும் டிக் டாக் தனது மனுவில் கோரியிருந்தனர்.
கலிபோர்னியாவில் உள்ள மத்திய நீதிமன்றத்தில் டிரம்ப் மற்றும் வர்த்தக அமைச்சர் வில்பர் ராஸ்க்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. டிக் டாக் செயலியை விற்க அதன் தாய் நிறுவனமான பைடான்ஸ் முயற்சி செய்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.
முன்னதாக இந்தியாவிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





