--- --:--:-- --

ஒரு சவரன் தங்கத்தின் விலை 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைவு..!

8

ஆபரண தங்கத்தின் விலை சரிந்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் கீழாக வந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து 4,993 ரூபாய்க்கும், ஒரு சவரன் 440 ரூபாய் விலை இறங்கி 39 ஆயிரத்து 944 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

 

வெள்ளி கிராமுக்கு 50 காசு விலை குறைந்து 72 ரூபாய் 20 பைசாவுக்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. கொரொனா பொது முடக்கத்தின் ஆரம்ப காலத்தில் விலை உயர்ந்து கொண்டே சென்ற தங்கத்தின் விலை ஒரு சவரன் 40 ஆயிரத்தை தாண்டியது.

 

இதனால் மக்கள் மிகவும் அச்சம் அடைந்து இருந்தனர். இந்நிலையில் தற்போது நிகழும் விலை குறைவு மக்களிடையே நிம்மதியை தருகிறது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon