நித்யானந்தாவுக்கு ஹோட்டல் உரிமையாளர் அனுப்பிய கடிதம்..!
நித்யானந்தாவின் கைலாச விற்கு கடிதம் எழுதிய மதுரை ஹோட்டல் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் மற்றும் காவல் துறையிடம் வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் புகார் அளித்துள்ளார்.
இந்திய அரசுக்கு எதிராக செயல்பட்டு வருவதோடு அரசால் தேடப்படும் நித்தியானந்தாவுக்கு ஆதரவாக ஹோட்டல் உரிமையாளர் செயல்படுவதாக மனுவில் தெரிவித்துள்ளார்.
கைலாசா வில் ஹோட்டல் திறந்திருக்கும் மதுரையை சேர்ந்த குமார் என்பவர் கடிதம் எழுதியுள்ளார். இதற்கு பதிலளித்த நித்தியானந்தா உணவகம் வைக்க அங்கீகாரம் அளிப்பதாக அறிவித்திருந்தார்.






