தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய விருது..!
தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சரஸ்வதி 2020 ஆம் ஆண்டு தேசிய ஆசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
அதேபோல் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திலீப் தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளார். புதுச்சேரி காட்டேரி பக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அரசு உயர் நிலைப்பள்ளி ஆசிரியர் செல்வ முத்துக்குமரன் ராஜ்குமாருக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.







