பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பிரிவு சார்பில் நடத்தப்பட்ட ஓவிய,கோலப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவை எஸ்.பி.அருளரசு பரிசுகளை வழங்கி பாராட்டு !!!
சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பிரிவு தலைமையகம் சார்பில் கடந்த மே மாதம் ஆன்லைன் மூலம் ஓவியம் மற்றும் கோலப்போட்டிகள் நடைபெற்றன.இதில் சிறுவர்,சிறுமியர்,பெண்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த நிலையில் போட்டிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ஓவியப் போட்டி மற்றும் கோலப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்ற 6 பெண்கள் மற்றும் 22 குழந்தைகளுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனிதா (CWC) ஆகியோர் இன்று நேரில் வரவழைத்து பரிசுகளை வழங்கி பாராட்டினர். 






