--- --:--:-- --

14 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி டாஸ்மாக் விற்பனையாளர்கள் இன்று மேட்டுப்பாளையத்தில் கடை முன்பு பாதாகைகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் !!!

14 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி டாஸ்மாக் விற்பனையாளர்கள் இன்று மேட்டுப்பாளையத்தில் கடை முன்பு பாதாகைகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் !!!

மிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்ற சூழலில் டாஸ்மாக் கடைகள் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

 

இதனால் கொரானோ வைரஸ் அதிக அளவில் பரவ வாய்ப்புள்ள பகுதியாக டாஸ்மாக் கடைகளில் இருந்துவரும் நிலையில்  டாஸ்மார்க் கடையில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் போன்றோருக்கு கொரானோ வைரஸ் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

டாஸ்மார்க் கடையில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் கொரானோவால் உயிரிழப்பு என்பதும் அதிகரித்தே வருகிறது.

 

எனவே,அரசின் வருவாயை கூட்ட எவ்வித எதிர்பார்ப்புமின்றி தொடர்ந்து பாடுபட்டு வரும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு போதிய வசதிகளை செய்து கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில்
டாஸ்மாக் கடையில் பணியாற்றக்கூடிய ஊழியர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது.

 

இந்ந நிலையில் தமிழக அரசுக்கு 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து டாஸ்மார்க் விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் இந்த ஆர்பாட்டமானது நடைப்பெற்றது.

மேட்டுப்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு இன்று கடை திறப்புக்கு முன்பு கையில் பதாகைகளுடன் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.

 

டாஸ்மாக் விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் இன்று மாவட்ட துணைத் தலைவர் பத்மநாபன் தலைமையில் பல்வேறு இடங்களில் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

 

ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு ஏற்கனவே அரசுத்துறை அதிகாரிகளுக்காக கொண்டுவரப்பட்டுள்ள அரசாணை 280ல் டாஸ்மாக் ஊழியர்களை சேர்க்க வேண்டும்,டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கொரானோவால் டாஸ்மாக் ஊழியர்கள் உயிரிழந்தால் இழப்பீடாக 50 லட்சம் வழங்குவதுடன் வாரிசுகளுக்கு அரசுவேலை வழங்க வேண்டும் என்பது போன்ற 14 அம்ச கோரிக்ககைகளை வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடைப்பெற்றது.

 

கடைமுன்பு கையில் பதாகைகளுன் ஆர்பபாட்டத்தில் கலந்துகொண்ட டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர்.

Leave a Reply

Right Menu Icon