--- --:--:-- --

ஊத்தப்பத்திற்காக தகராறில் ஈடுபட்ட திமுக ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் மகன் உட்பட 6 இளைஞர்கள்..!

9

யிலாடுதுறையில் நன்கறியப்பட்ட உணவகம் ஒன்றில் ஊத்தப்பம் கேட்டு திமுக ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் மகன் உட்பட 6 பேர் அட்டகாசம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. மயிலாடுதுறையில் நன்கறியப்பட்ட உணவகத்தில் சாப்பிட சென்ற ஆறு பேர் ஊத்தப்பம் இல்லை என கூறியதால் சண்டையிட்டுளனர்.

 

மது போதையில் இருந்த அவர்கள் உணவக ஊழியரை கத்தியால் குத்த முயன்றதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் உணவகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து உணவக உரிமையாளர் முகமது அஷ்ரஃப் சிசிடிவி பதிவுகளோடு மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

விசாரணையில் தகராறில் ஈடுபட்டது திமுக ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் மகன் பிரதாப் மற்றும் அவரது நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon