ஈராக்கில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒரே ஒரு குடும்பம்..!
ஈராக்கில் உள்ள எல்லையோர கிராமத்தில் ஒரே ஒரு நபர் தன் குடும்பத்தோடு தனியாக வசித்து வருகிறார்.
ஈராக் துருக்கி எல்லையில் தனி தேசம் கேட்டு போராடி வரும் குருது போராளிகளுக்கும் துருக்கி ராணுவத்தினருக்கும் தொடர்ந்து நடந்துவரும் போரால் துருக்கி எல்லையிலுள்ள போதி கிராமத்தில் வசிக்கும் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் துருக்கியின் வான் தாக்குதலுக்கு அஞ்சி நகர் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து விட்டனர்.
வெறிச்சோடிய சாலைகள் மற்றும் தகர்க்கப்பட்ட கட்டடங்களுக்கு இடையே தனிமையில் வசிக்கும் கமல் தனது குடும்பத்திற்கு தேவையான காய்கறிகளை தானே விளைவித்து வருகிறார்.







