--- --:--:-- --

சுஷாந்த் மரண வழக்கை சி‌பி‌ஐ விசாரிக்க உச்சநீதிமன்றம்..!

1.1

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் இறப்பு குறித்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை மும்பைக்கு மாற்ற கோரி அவரது காதலியும் நடிகையுமான ரியாச்சக்கரவர்த்தி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த மரணம் தொடர்பாக பிகாரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை செல்லும் என்று உத்தரவிட்டது.

 

வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய பீகார் அரசின் பரிந்துரையை ஏற்று உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம் வழக்கை மும்பைக்கு மாற்ற கோரி ரியா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.

 

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக அவரது தந்தை புகார் பீகார் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

கடந்த ஜூலை 14-ஆம் தேதி சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பை பாந்திராவில் உள்ள தனது குடியிருப்பில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ள சுஷாந்த் மரணம் பற்றி தற்போது சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon