எஃப்எம்ஜிஇ தேர்வை நடத்துவது குறித்து மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்..!
வெளிநாடுகளில் மருத்துவ படிப்பு முடித்தவர்களுக்காக இந்தியாவில் நடத்தப்படும் தேர்வை அவரவர் மாநிலங்களிலேயே நடத்தக் கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவில் மருத்துவ பயிற்சி மேற் கொள்வதற்காக நடத்தப்படும் எஃப்எம்ஜிஇ
தேர்வு வரும் 31ம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் தேர்வு மையங்கள் வெவ்வேறு மாநிலங்களில் ஒதுக்கப்பட்டு உள்ளதால் கொரொனா காலத்தில் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு எழுதுவதைத் தவிர விட்டால் மாணவர்களுக்கு ஓராண்டு வீணாகி விடும் எனக் கூறி இருக்கும் ஸ்டாலின் தமிழகத்திலேயே தேர்வை நடத்த இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.
இந்த கடிதத்தில் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனிடம் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி ஆர் பாலு வழங்கியுள்ளார்.







