--- --:--:-- --

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மருத்துவமனையில் இருந்தே தனது பணிகளை கவனித்து வருகிறார்..!

2

த்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த படியே தனது பணிகளை கவனித்து வருகிறார். கொரொனாவால் பாதிக்கப்பட்டிருந்த அமித்ஷா சிகிச்சைக்கு பிறகு நெகட்டிவ் என முடிவு வந்ததால் கடந்த 14ம் தேதி வீடு திரும்பினார்.

 

இந்நிலையில் உடல் சோர்வு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை எய்ம்ஸ் இயக்குனர் ரந்திப் குலேரியா தலைமையிலான மருத்துவர் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

 

கடந்த 4 நாட்களாக உடல் சோர்வு மற்றும் உடல்வலி இருப்பதாக அமைச்சர் அமித்ஷா கூறியதை அடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் இருந்தபடியே அவர் தனது பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கொரொனாவில் இருந்து மீண்ட நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உள்துறை அமைச்சர் அமித் ஷா விரைவில் குணமடைய வேண்டுமென தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

 

உள்துறை அமைச்சர் அமித் ஷா விரைவில் குணமடைந்து தமது பணிகளைத் தொடங்க வேண்டும் என வாழ்த்தியுள்ளார். கொரொனாவிலிருந்து அமித்ஷா மீண்ட நிலையில் உடல் வலி காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon