நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் இன்று கூடுகிறது..!
நாட்டில் கொரொனா நிலைமை குறித்து விவாதிக்க நாடாளுமன்ற நிலைக்குழு இன்று கூடுகிறது. எய்ம்ஸ் இயக்குனர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
உள்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் காங்கிரஸ் மூத்த தலைவர் அனில் சர்மா தலைமையில் நடைபெற உள்ளது. இதில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக எய்ம்ஸ் இயக்குநர் ரந்திப் குலேரியா, சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் ஆகியோரிடம் நிலை குழுவினர் ஆலோசிக்க உள்ளனர்.







