--- --:--:-- --

பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதிக்க கோரி திடீர் உண்ணாவிரத போராட்டம்..!

7.2

பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதிக்க கோரி சக்தி சேனா அமைப்பைச் சேர்ந்தவர் விநாயகர் சிலை உடன் காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு உள்ள சித்தி விநாயகர் கோவில் முன்பு திடீர் உண்ணாவிரத போராட்டம் – பரபரப்பு !!!

 

தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்,பாரதிய ஜனதா கட்சியினர் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சக்தி சேனா அமைப்பைச் சேர்ந்த கோவை தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சம்பத் என்பவர் இன்று கையில் விநாயகர் சிலையுடன் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள சித்தி விநாயகர் கோவில் முன்பு திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.இதனால் அங்கு திடீரென பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றினர்.

 

முன்னதாக அவர் தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி அளிக்க வேண்டும்,உரிய வழிமுறைகளுடன் அனைத்து இடங்களிலும் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்.இதனால் அப்பகுதியில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Right Menu Icon