சென்னையில் 150 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள்..! மதுப்பிரியர்கள் உற்சாகம்..!
சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் 150 நாட்களாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் இன்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன. அரசு வழிகாட்டு நெறிமுறை படி நாளொன்றுக்கு 500 நபர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுவதால் காலை 8 மணி முதலே மதுபானம் வாங்கி செல்ல மது பிரியர்கள் இருந்தனர்.
அவர்கள் இனிப்புகள் வழங்கி கடை திறப்பை கொண்டாடினர். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்த நிலையில் 9 மணி அளவில் டோக்கன்கள் வழங்கப்பட்டன . 3 அடி சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு முக கவசம் அணிந்து வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு கடை முன்பு ஷாமியானா பந்தல் அமைக்கப்பட்டு ஒலிபெருக்கி மூலம் முக கவசம் அணியவும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.







