6 வார பச்சிளம் குழந்தையை தலைகீழாக பிடித்து தொங்கவிட்ட தந்தைக்கு சிறை தண்டனை..!
ரஷ்யாவில் 6 வார குழந்தை ஒன்றின் காலை பிடித்து தலைகீழாக தொங்க விட்ட தாய், தந்தை கைது செய்யப்பட்டனர். தலைநகர் மாஸ்கோவில் புறநகர்ப் பகுதியில் ஒரு தம்பதி அங்கு பிறந்த ஆறு வாரங்களே ஆன குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது குழந்தையின் ஒரு காலைப்பிடித்து தூக்கிய தந்தை அதனை தலைகீழாக பிடித்து அங்கும் இங்கும் ஆட்டினார். இதனை குழந்தையின் தாயார் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குழந்தையின் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாக வழக்கு பதிவு செய்தனர்.
குழந்தையின் தாய்க்கு 10 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது தந்தையும் சிறையில் அடைக்கப்பட்டார்.







