வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படும் விதியில் சிறு மாற்றம்..!
வெளிநாடுகளில் இருந்து 10 வயது குழந்தைகளுடன் சென்னை வரும் பயணிகளுக்கு முகாம்களில் தனிமைப் படுத்திக் கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விமானம் மூலம் சென்னை வரும் பயணிகளுக்கான கட்டுப்பாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது.
மருத்துவ தேவை இருப்பவர்கள் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கருவுற்ற பெண்கள் 75 வயதை கடந்தவர்கள் முகாம்களில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டாம் என ஏற்கனவே விளக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி மேலும் சில தளர்வுகள் அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுடன் வருபவர்களுக்கு முகாம்களில் தனிமைப் படுத்திக் கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் 96 மணி நேரத்திற்கு முன்பு பிசிஆர் பரிசோதனை செய்து நெகட்டிவ் என்ற சான்றிதழுடன் வருபவர்களையும் இனி முகாம்களில் தனிமைப்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.






