--- --:--:-- --

தாயிடம் கோபித்துகொண்டு வீட்டைவிட்டு வெளியேறிய 5 வயது சிறுவன்..!

10

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தாயுடன் கோபித்துக்கொண்டு காணாமல்போன 5 வயது சிறுவனை ஒரு மணி நேரத்தில் பத்திரமாக மீட்ட போலீசாருக்கு பாராட்டு குவிகிறது.

 

பஜனை கோவில் வீதியை சேர்ந்த பேச்சியம்மாள் இளைய மகனான சந்துரு தாய் திட்டியதால் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்று வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர் வீடுகளில் குழந்தையை தேடிய தாய் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் போக்குவரத்து கழக பணிமனை பின்புறத்தில் வழி தெரியாமல் நின்று கொண்டிருந்த சிறுவனை ஒரு மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon