--- --:--:-- --

சென்னையில் பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய டெலிவெரி பாய் கைது..!

5

சென்னை சூளைமேட்டில் 26 வயதான பெண்ணின் செல்போனுக்கு ஆபாச வீடியோக்கள் படங்களை அனுப்பி தொந்தரவு செய்த அமேசான் நிறுவன டெலிவெரி ஊழியரை போலீஸார் கைது செய்தனர். நபரை கையும் களவுமாக பிடிக்க அந்த பெண் தனது வீட்டின் முகவரியை கொடுத்து வரவழைத்துள்ளார்.

 

அந்த நபர் வீட்டிற்கு வந்தவுடன் அருகில் இருந்தவர்களின் உதவியோடு பிடித்து விசாரிக்கும் போது திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

 

பெண் கொடுத்த புகாரின் பேரில் அமேசான் டெலிவரி ஊழியரை கைது செய்த சூளைமேடு போலீசார் அந்தப் பெண்ணிடம் இருந்து பிரிந்து சென்ற கணவர் இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave a Reply

Right Menu Icon