குப்பை பொறுக்கி வந்த மூதாட்டிகள் வீட்டில் கட்டு கட்டாக பணம்..!
சென்னையில் குப்பை பொறுக்கி வந்த ஆதரவற்ற மூதாட்டியின் வீட்டில் குப்பை மூட்டைகளில் இருந்து இரண்டு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் மற்றும் நான்கு குடங்களில் சில்லரை காசுகள் கிடைத்துள்ளன.
ஓட்டேரி சத்திய வாணிமுத்து நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி, விஜயலட்சுமி, மகேஸ்வரி. குப்பை பொறுக்கி வாழ்ந்து வந்த நிலையில் மகேஸ்வரி இறந்து விட மற்ற இருவரும் பிளாட்பாரத்தில் வசித்து வந்துள்ளனர்.
இதுகுறித்து தலைமைச் செயலக போலீசார் விசாரித்ததில் வீட்டில் குப்பை இருப்பதால் வசிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர். இதையடுத்து மூதாட்டிகள் வீட்டிலிருந்து குப்பைகளை மாநகராட்சி உதவியுடன் அகற்றிய போது அதில் பத்து ரூபாய் தாள்கள் உட்பட2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப்பணம், 4 குடம் அளவில் சில்லரை காசுகள், நாற்பதாயிரம் அளவில் மதிப்பிழந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் கிடைத்துள்ளன.
இவ்வளவு பணம் இருந்தும் அதை பயன்படுத்த தெரியாத அளவில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக இருந்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.







