--- --:--:-- --

தனக்கு பிறந்த குழந்தையை காண சென்றவரை வழிமறித்து அறிவாளால் வெட்டிய கும்பல்..!

14

கும்பகோணம் அருகே இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலகபீஷ் தளத்தை சேர்ந்த அருண்குமார் என்பவர் பிறந்து இருபத்தி மூன்று நாட்களே ஆன தனது ஆண் குழந்தையைக் காண நாக குடியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

 

அப்போது சுவாமி மலைப்பகுதியில் அவரை வழி மறித்த மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியது. வயல்வெளியில் ஓடித் தப்ப முயன்ற அவரை விடாமல் துரத்தி வெட்டியதில் அருண்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நண்பர்களுக்கு இடையேயான முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon