இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செவிலியர் உயிரிழப்பு
இராமநாதபுரம் மாவட்டம் பாண்டியூர் கிராமத்தை சேர்ந்த இளையராஜா என்பவரின் மனைவி கலைச்செல்வி இவர் முதலமைச்சரின் காப்பீட்டு திட்ட பிரிவில் தொகுப்பூதிய செவிலியராக கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் 26ஆம் தேதி உடல் நலம் சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது .பரிசோதனையில் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில் கொரோனா வார்டு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார்.
மேலும் இவர் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டதாக கூறி கடந்த 3 தினங்களுக்கு முன்பு இவரை மருத்துவ நிர்வாகம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலையில் திடீரென இவர் உயிரிழந்துள்ளார். இதனால் பாண்டியூர் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வீடு திரும்பிய செவிலியர் திடீரென உயிர் இழந்ததால் செவிலியர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செவிலியர் கலைச்செல்வி க்கு ஒரு மகன் மகள் உள்ளனர். இவரது கணவர் பாண்டியூரில் மெடிக்கல் நடத்தி வருகிறார்.மேலும் அரசு உயிரிழந்த செவிலியர் கலைச்செல்வி குடும்பத்திற்கு உரிய நிவாரணம் கிடைக்க மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்







