இயற்கை உபாதையை கழிக்க சென்ற பள்ளி மாணவியை செல்போனில் படமெடுத்தவன் கைது..!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்ற பள்ளி மாணவியை செல்போனில் படமெடுத்தவனை உறவினர்கள் சரமாரியாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தென்னம்பட்டி பகுதியில் குளக்கரையில் சட்டவிரோதமாக மணல் அள்ளிக் கொண்டிருந்த பாண்டியராஜன் என்பவன் ஒரு பக்கம் இயற்கை உபாதை கழிக்க சென்ற மாணவியை செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது.
மாணவியின் கூச்சல் சத்தம் கேட்டு ஓடி வந்து விசாரித்த உறவினர்களின் சாதிப்பெயரை சொல்லி திட்டியதாகவும் ஆயுதங்களைக் கொண்ட மிரட்டியதாகவும் கூறப்படுகிறது .இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் பாண்டியராஜன் அவனது தந்தை சகோதரன் மற்றும் உறவினர் ஆகியோரை சரமாரியாக தாக்கிய போலீசார் ஒப்படைத்தனர். 4 பேர் மீதும் வடமதுரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.






