பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்..!
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 8ஆம் தேதி மூச்சுவிடுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதை தொடர்ந்து இரு தினங்கள் மருத்துவ கண்காணிப்பில் இருந்த அவர் திங்கள்கிழமை வீடு திரும்பினார். இந்த நிலையில் சஞ்சய்தத் மூன்றாம் நிலை நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகரான அத்தியாயன் சுமனும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் புற்றுநோய் சிகிச்சைக்காக சஞ்சய்தத் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.







