--- --:--:-- --

டெல்லியில் சீன நிறுவனங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் சிக்கிய 40 போலி வங்கி கணக்கு..!

6

வாலா பண பரிமாற்றம் மற்றும் அன்னிய செலவாணி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக சீன நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

 

தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சீன நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களுடன் இணைந்து ஹவாலா மற்றும் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபடுவதாக வருமான வரித் துறைக்கு புகார் வந்தது.

 

இதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள சந்தேகத்திற்கிடமான சீன நிறுவனங்கள் மீது வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை 40 போலி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு ஆயிரம் கோடி ரூபாய்க்கு பணம் பரிமாற்றம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

 

மேலும் வங்கி ஊழியர்கள், ஆடிட்டர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹவாலா மோசடியில் தொடர்பு ள்ள வங்கி ஊழியர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon