--- --:--:-- --

கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்..!

6.1

மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் உள்ள ஒரு கட்டியை அகற்றுவதற்காக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

 

அறுவை சிகிச்சைக்கு பின் பிரணாப் செயற்கை சுவாசத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உடல் நிலை சற்றே கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக செய்யப்பட்ட சோதனைகளில் பிரணாப் முகர்ஜிக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதியானது.

 

எனவே தன்னுடன் சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் கொரொனா சோதனை செய்து கொள்ளுமாறும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் பிரணாப் முகர்ஜி தன் டுவிட்டர் பதிவில் அறிவுறுத்தியிருந்தார்.

 

அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்படும் முன்பு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மருத்துவமனைக்கு சென்ற பிரணாப் முகர்ஜியின் உடல் நலம் குறித்து விசாரித்தார். விரைவில் குணம்பெற மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள், கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon