--- --:--:-- --

ஹைதராபாத்தில் கொண்டு சேர்க்கப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்..!

3.1

சென்னை மணலியில் உள்ள சரக்கு பெட்டக முனையத்தில் இருந்து முதற்கட்டமாக 181 டன் அமோனியம் நைட்ரேட் ஹைதராபாத் கொண்டு செல்லப்பட்டது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரேட் வெடித்து விபத்திற்குள்ளானது. 150 பேர் உயிரிழந்தனர்.

 

உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த கோர சம்பவத்தின் தாக்கம் தமிழக தலைநகர் சென்னையில் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஐந்தாண்டுகளுக்கு முன் சென்னை மணலியில் உள்ள சரக்கு பெட்டக முனையத்தில் 240 டன் அமோனியம் நைட்ரேட் சேமித்து வைக்கப்பட்டு இருப்பது குறித்த தகவல் அப்போது தான் வெளி உலகிற்கு தெரிய வந்தது.

 

அதனால் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் எழுந்த நிலையில் தீயணைப்பு துறை காவல் துறை வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவுப்படி அம்மோனியம் நைட்ரேட் நடவடிக்கைகளைத் தொடங்கியது சுங்கத்துறை.

 

ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஏலம் எடுத்து அதன்படி 181 பில்லியன் அமோனியம் நைட்ரேட்டை 10 கண்டெய்னர்களில் ஹைதராபாத்துக்கு அனுப்பி வைத்துள்ளது சுங்கத்துறை. பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு காவல்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகள் முன்னிலையில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

 

லாரிகளுக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ தமிழக ஆந்திர காவல்துறையின் கண்காணிப்பில் சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்படும் இந்த ரசாயன பொருள் மூன்று நாட்களில் ஹைதராபாத் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon