லெபானானில் திருமணத்திற்கு போஸ் கொடுத்து கொண்டிருந்த பெண்….! திடீரென ஏற்பட்ட வெடி விபத்து..!
திருமணத்தின்போது எடுக்கப்படும் புகைப்படங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நினைவுகளை தருவதாக இருக்கும். இளம் பெண் ஒருவர் தனது திருமணத்திற்கு புகைப்படங்கள் எடுக்க போஸ் கொண்டிருந்தபோது அந்த பெருவெடிப்பு நிகழ்ந்து அவரை பதற்றம் அடைய வைத்துள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த நான்காம் தேதி 2,750 டன் மதிப்பிலான அமோனியம் நைட்ரேட் மருந்து வெடித்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த நிகழ்வின் போது தான் அந்த இளம் பெண்ணும் திருமணம் முடிந்தவுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து நிகழபதற்றத்துடன் அந்த இடத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு ஓடியுள்ளார் அந்த மணப்பெண். அந்த வீடியோ காட்சிகளை இப்போது வெளியிட்டுள்ளார்.
திருமண போட்டோ ஷூட் தற்போது வைரல் ஆகி அந்த பெண்ணுக்கு மறக்க முடியாத தருணமாக மாறியுள்ளது. இந்த வீடியோவை புகைப்பட கலைஞர் மஹ்மூத் வெளியிட்டுள்ளார்.







