--- --:--:-- --

“கொரோனா பாதிப்புக்கு ஆளாகும் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை விறுவிறுவென உயர்கிறது” மேலும் 3 பேருக்கு தொற்று உறுதியானது!!

16

மிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை தினமும் உயர்ந்து வரும் நிலையில், இந்த தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் எம்எல்ஏக்களின் பட்டியலும் நீள்கிறது. மேலும் 3 எம்எல்ஏக்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியான நிலையில் மொத்த எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

 

தமிழகத்தில் இதுவரை மொத்த கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2,90,907 ஆகவும், உயிரிழப்பு 4808 ஆகவும் உயர்ந்துள்ளது.தமிழகம் முழுவதும் இந்த பாதிப்பு தினசரி 5 ஆயிரத்திற்கு மேலாகவும், உயிரிழப்பும் தினசரி 100ஐ தாண்டியும் பதிவாகி வருகிறது. இதில் சென்னையில் மட்டும் பல நாட்களாக தினசரி 2000 ஐ தாண்டி பதிவாகி அச்சுறுத்தி வந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கடந்த இரு நாட்களாக ஆயிரத்திற்கு கீழாக பாதிப்பு இறங்கு முகத்திற்கு சென்றுள்ளது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

ஆனால் பிற மாவட்டங்களில், குறிப்பாக தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் தான் இந்த எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்து பீதியை கிளப்பி வருகிறது. இதேபோல் பொது வாழ்க்கையில் உள்ள அரசியல்வாதிகளையும் இந்த தொற்று பாதிப்பு விட்டு வைக்க வில்லை. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர்களில் 4 பேர், எம்எல்ஏக்கள் 25 பேர் வரை இந்த தொற்றுக்கு ஆளாகி, இதில் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில்குமார், மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி அதிமுக எம்எல்ஏ மாணிக்கம், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரி ஆகிய 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொற்று பாதிக்கப்பட்ட எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்த நிலையில், தமிழக அரசியல் புள்ளிகள் பலரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon