--- --:--:-- --

இடுக்கி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 25 பேரின் உடல்கள் மீட்பு..!

11

கேரள மாநிலம் மூணாறு அருகே தேயிலை தோட்டத்தில் நேர்ந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை இதுவரை 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இடுக்கி மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் வியாழக்கிழமை இரவு நிலச்சரிவு ஏற்பட்டதில் அப்பகுதியில் உள்ள 32 குடியிருப்புகள் முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்துள்ளன.

 

அங்கு 80க்கும் மேற்பட்டோர் வசித்து வந்ததாக கூறப்படும் நிலையில் அதில் 25 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 15 பேரை சிறு காயங்களுடன் மீட்ட பேரிடர் மீட்பு படை வீரர்கள் காணாமல் போன 44 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். மீட்புப் பணியை சேர்ந்த 55 வீரர்கள் குழுக்களாக பிரிந்து தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

இதற்காக மூணாறு,மறையூர், காந்தலூர் பகுதிகளில் இருந்து மண் அள்ளும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது மழை பெய்வதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினரிடம் ஒப்படைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon