--- --:--:-- --

சிறிய ரக விமானத்தின் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்து பறக்கவிட்ட நடிகர் அஜீத்..!

7

சிறிய ரக விமானத்தின் தொழில்நுட்ப கோளாறை நடிகர் அஜித்குமார் சரி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. ஏரோ மாடலிங், கார் பந்தயங்களில் ஆர்வம் கொண்ட நடிகர் அஜித்குமார் அண்மையில் சிறிய ரக விமானத்தை ரிமோட் கண்ட்ரோல் மூலம் சோதனை செய்த வீடியோ வெளியாகியுள்ளது.

 

அதில் விமானம் புறப்பட்ட பின்பு வலது புறத்தில் உள்ள பிரதான தரையிறங்கும் கியர் சரிவர இயங்காமல் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து நடிகர் அஜித்குமார் நீண்ட முயற்சிக்கு பிறகு சிறிய விமானத்தை பத்திரமாக தரை இறங்க செய்தார்.

 

திரை உலகில் அஜித் குமார் 28 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக இந்த வீடியோ உடன் 28 எயர்ஸ் ஆஃப் செல்ஃப்மேட் தல அஜித் என்ற ஹேஸ் டேக் வைரலானது.

Leave a Reply

Right Menu Icon