--- --:--:-- --

காரில் பூட்டிக்கொண்டு 3 குழந்தைகள் மூச்சுத்திணறி பலி..!

8

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரில் விளையாட சென்ற 3 குழந்தைகள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். கண்ணவரம் என்ற இடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மோகன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவர் தனது காரை வெளியே நிறுத்திவிட்டு அலுவலகத்தின் உள்ளே பணியில் ஈடுபட்டார்.

 

அப்போது அவரது காரை திறந்து விளையாட சென்ற மூன்று குழந்தைகள் பூட்டிக் கொண்டு கதவை திறக்க முடியாமல் திணறினர். இதனால் ஏற்பட்ட மூச்சுத்திணறலால் மூன்று குழந்தைகள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக கண்ணவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon