நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு..!
நடப்பு கல்வியாண்டுக்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக உள்ள இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் கொரொனா கட்டுக்குள் வந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னரே தேர்வை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நீட் ஆகிய தேர்வுகளுக்காக மாவட்டத்திற்கு ஒன்று என்ற அளவில் மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் 11 மாணவர்கள் தாக்கல் செய்த மனுவில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.







